மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ் பிஸியான ஹீரோவாக நடித்து வந்த நிலையில் கடந்த 2019 இயக்குனராகவும் மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அதை தொடர்ந்து மீண்டும் 'ப்ரோ டாடி' என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கிய பிரித்விராஜ் தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கியுள்ளார். வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. லூசிபர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு பிரித்விராஜுக்கு தேடி வந்தது. அதே சமயம் அவரது பிஸியான ஷெட்யூல் காரணமாக அதை அவர் ஏற்க முடியாமல் போனது.
இந்த நிலையில் சமீபத்தில் எம்புரான் பட டிரைலரை ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று அவருக்கு போட்டுக்காட்டி வாழ்த்துகளை பெற்று விட்டு வந்துள்ளார் பிரித்விராஜ். சமீபத்திய பேட்டி ஒன்றில் லூசிபர் படத்தில் மோகன்லால் காரில் இருந்து இறங்கி வரும் ஓப்பனிங் காட்சி குறித்து ஒரு ஆச்சரியத் தகவலை அவர் கூறியுள்ளார்.
அதாவது பல வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போயஸ் கார்டன் சாலை பகுதியில் முதல்வரின் கான்வாய் செல்வதற்காக ரஜினிகாந்தின் காரை செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். கொஞ்ச நேரத்தில் டென்ஷனான ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார். அவர் நடப்பதை பார்த்ததும் பெரும் கூட்டம் கூடிவிட்டது என்று சொல்லப்பட்டது.
“இந்த செய்தியை நான் செய்தித்தாளில் படித்திருக்கிறேன். அதை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்து தான் லூசிபர் படத்தின் ஓப்பனிங் காட்சியை உருவாக்கினேன். அறிமுக காட்சியில் மோகன்லாலின் காரை செல்ல விடாமல் போலீஸார் தடுப்பார்கள். அதனால் மோகன்லால் சாதுரியமாக, கார் தானே போகக்கூடாது.. நான் போக தடை இல்லையே என்று கூறி காரில் இருந்து இறங்கி நடந்து செல்லும் விதமாக அந்த காட்சியை உருவாக்கினேன்” என்று கூறியுள்ளார்.




