ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

சூர்யா நடித்துள்ள ‛கருப்பு' படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இது தவிர வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்திலும் நடித்துள்ளார். தற்போது அவரின் 47வது படம் துவங்கி உள்ளது. இதை மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குகிறார். இதை சூர்யா புதிதாக துவங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.
கதாநாயகியாக நஸ்ரியாவும், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லினும் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். தற்போது இந்த படத்தை 2027ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர ஆரம்ப கட்டமாக திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கனவே இதே பொங்கலுக்கு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 173வது படமும் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




