'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திரிஷா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், ''குட் பேட் அக்லி படம் ஆக்சன் மட்டும் இன்றி எமோஷனல் கதையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால், இந்த உலகம் நம்மை நல்லபடியாக பார்த்தால் நாமும் நல்லவராகதான் இருப்போம். ஆனால் கெட்டவராக பார்த்தால் அதை விடவும் நாம் கெட்டவராக அக்லியாக இருக்க வேண்டிய நிலை வரும் என்ற கருவை மையமாக கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கதாபாத்திரத்தில் அஜித்குமாரை திரையில் எப்படி கொண்டு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அதை விட அவர் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்'' என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும், இந்த படத்தில் அஜித்குமாரின் மகனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தேவ் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த வரலாறு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதேபோல், சலார் திரைப்படத்தில், பிரித்விராஜின் சிறு வயது கதாப்பாத்திரமாக நடித்திருந்தார், கார்த்திகேயா தேவ்.