8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த, “''ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, எஞ் ஜோடி மஞ்சக் குருவி'' ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தது. படத்தின் வரவேற்புக்கு பொருத்தமான இடங்களில் வந்த அந்தப் பாடல்களும் ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அந்தப் பாடல்களை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அப்பாடல்களை உடனே நீக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் ஓடிடி தளங்களில் அந்தப் பாடல்கள் அப்படியே இருந்தன.
அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என இளையராஜா தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து 'குட் பேட் அக்லி' படத்தை ஓடிடியிலிருந்து நீக்கினர். சில நாள் இடைவெளிக்குப் பிறகு தற்போது அந்தப் பாடல்கள் இல்லாமல் மீண்டும் ஓடிடியில் படத்தை இணைத்துள்ளனர். அந்தப் பாடல்களுக்குப் பதிலாக வேறு இசையை சேர்த்துள்ளனர். ஆனால், அவை பொருத்தமாக இல்லை.
மேலும், நீதிமன்றத்திலும் மைத்ரி நிறுவனம் மேல் முறையீடு செய்துள்ளது.




