'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா நடித்த வித் லவ் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் அனஸ்வரா பேசுகையில், "சில தினங்களுக்கு முன்பு ரஜினி சாரை சந்தித்து படக்குழு பேசினோம். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. கடந்த வாரம் பல ஊர்களில் உள்ள தியேட்டர் சென்று படம் பார்த்தோம். அப்போது என் கேரக்டர் பெயரை சொல்லி பலரும் கத்தினார்கள். மறக்க முடியாத நிகழ்வு என்றார்.
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா பேசுகையில், ‛‛இந்த படம் வெற்றி அடைந்தவுடன் அப்பாவை சந்தித்தேன். அவர் ஒரு சிரிப்பு சிரித்தார். இது தான் வெற்றியா என கேட்டேன். கடந்த 17 ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு துறைகளில் இருக்கிறேன். இந்த பேமிலி தான் எனக் கு வெற்றி வாங்கி கொடுத்தது. படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் என் தம்பி மாதிரி'' என்றார்.
ஹீரோ அபிஷன் பேசுகையில் அடுத்து, இதே கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுகிறேன் என்றார்.