'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து |

திருமணத்திற்கு பிறகு சரஸ்வதி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தை தனது தங்கை பூஜாவுடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அவரே தயாரித்துள்ளார். இந்த படத்தில் வரலட்சுமியுடன் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடிக்க, தமன் இசையமைக்கிறார். கடந்த மாதத்தில் முடிவடைந்த இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.
இந்நிலையில் வரலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது டைரக்டர் Vs ஆக்டர் என்ற அந்த வீடியோவில் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டராக இருக்கும் வரலட்சுமி ஹீரோயினாக நடிக்கும் இன்னொரு வரலட்சுமிக்கு ஆக்ஷன் சொல்லுவது போன்று அந்த காட்சி இடம் பெற்றுள்ளது. அப்போது டயலாக் சம்பந்தமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தெலுங்கில் இடம் பெற்றுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.