'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

தமிழ், மலையாளத்தில் பல படங்களில் நடித்த மம்தா மோகன் தாஸ் தனது புற்று நோய் பாதிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛எனக்கு 24 வயதில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 27, 28 வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. என் கருமுட்டைகளை உறைய வைப்பது பற்றி யாரும் என்னிடம் சொல்லவில்லை. டாக்டர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் என்னிடம் சொல்லவில்லை.
சிகிச்சைக்கு பிறகு டாக்டர்களிடம் சென்று கேட்டேன். நீங்கள் எங்களிடம் கேட்கவில்லை என எளிதாக சொல்லி விட்டார்கள். எனக்கு எப்படி தெரியும்? அந்த மருத்துவர்கள் அமெரிக்காவில் படித்தவர்கள். நான் எல்லா மருத்துவர்களையும் குறை சொல்லவில்லை.
அறுவை சிகிச்சையின் போது 30, 35 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். நான் நர்சுகளுக்கு சொல்லிக் கொள்வது நீங்கள் நோயாளிகளின் அறைக்கு வரும் போது குறைந்தபட்சம் ஒரு சிறிய புன்னகையாவது வெளிப்படுத்துங்கள். அது நோயாளிகளுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில் எனக்கு ஆதரவு கொடுக்க சில பேர் வந்தார்கள். என் அருகில் இருந்து அழவில்லை..அவர்கள் என்ன்னை உற்சாகப்படுத்த ஜோக் சொன்னார்கள்'' என்றார்.