'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள படம் 'ரெட் பிளவர்'. விக்னேஷ் கதாநாயகனாகவும், மனிஷா ஜஷ்னானி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மனீஷா மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். 'இருக்கு ஆனா இல்ல, வீர சிவாஜி, போங்கு' உள்ளிட்ட சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். 'போங்கு' படம் 2017ம் ஆண்டு வெளியானது. தற்போது 8 வருடங்களுக்கு பிறகு 'ரெட் பிளவர்' படத்தின் மூலம் திரைக்கு வருகிறார்.
படத்தில் நாசர், ஒய் ஜி மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்னம், லீலா சாம்சன், டி எம் கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம் மற்றும் யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்துள்னர். சந்தோஷ் ராம் இசை அமைத்துள்ளார். ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "இந்த படம் கி.பி 2047ம் ஆண்டில், மூன்றாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலப்பரப்பை சித்தரிக்கிறது. இது தேசபக்தி, இரட்டை சகோதரர்களுக்கு இடையிலான துரோகம் மற்றும் அவர்களின் இறுதி நல்லிணக்கம் ஆகியவற்றின் கருப்பொருள்களை ஆராய்ந்து, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த செய்தியை வழங்குகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும்" என்றார்.