ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் படம் 'ரெட் பிளவர்'. கதையின் நாயகனாக விக்னேஷ் நடிக்கின்றார். மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடிக்கிறார். நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி உள்ளார். கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் ராம் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது “இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். விக்னேஷ் முதன் முறையாக முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார். படத்திற்காக உடல் எடை குறைத்து பிட்டாக நடித்துள்ளார். இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயம் ஒன்றை பற்றி இந்த படம் பேசுகிறது. நாயகி மனிஷா ஜஷ்லானி துணிச்சலான பல காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவர் நீச்சல் உடையில் பெரிய நடிகைகளுக்கு ஈடாக நடித்திருக்கிறார்'' என்றார்.