'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

மயாஜாலங்கள், மந்திர தந்திரங்கள், நம்ப முடியாத காட்சிகளை கொண்ட படங்களை பேண்டசி படங்கள் என்பார்கள். அதனை இன்றைய டிஜிட்டல் உலகத்தோடு இணைத்து சைபர் பேண்டசி படமாக உருவாகி உள்ளது 'அமீகோ'. இதில் சாந்தினி தமிழரசன் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பி.பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாந்தினியுடன் அர்ஜூன், சோமையா ஜூலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் பேண்டஸி ஹாரர் திரில்லர் படம். டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பாரம்பரியமாக இந்திய திகில் படங்கள் பெரும்பாலும் பேய் , ஆவி போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்பியுள்ளன. ஆனால் 'அமிகோ' இதுவரை யாரும் அறியப்படாத பிரதேசத்திற்குள் நுழைகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் உலகில் அமைதியற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. அமீகோ என்றால் நண்பர் என பொருள். இந்தத் திரைப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக வழங்குகிறது என்றார்.