ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி | பிளாஷ்பேக் : சிவனாக நடித்த எம்ஜிஆர் | 'பிரேமலு' மாதிரி 2கே லவ் ஸ்டோரி இருக்கும் : சுசீந்திரன் | தலைப்பிற்கு பஞ்சமா... : சிவகார்த்திகேயன் படத்திற்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், கடந்தவாரம் இந்தியன் 2 என்கிற பெயரில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட வசூல் ரீதியாக நல்ல முன்னேற்றத்துடன் இந்த படம் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர சில சர்ச்சைகளையும் இந்த படம் எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதல் பாகத்தில் சேனாபதி ஆக நடித்த கமல்ஹாசன் வர்மக்கலையில் வித்தகராக இருந்ததையும் என்றும் தனது எதிரிகளை வர்மம் மூலமாகவே தாக்கி செயல் இழக்க வைத்ததையும் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அந்த சமயத்தில் மதுரையை சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் என்பவர் கமலுக்கு வர்மக்கலையை பயன்படுத்துவது குறித்த பயிற்சிகளை அளித்து அதை படத்தில் முத்திரைகளுடன் பயன்படுத்தும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தார். இந்த இரண்டாம் பாகத்திலும் இந்த வர்மக்கலை முக்கிய இடம் பிடித்துள்ளது. அதேசமயம் இந்த இரண்டாம் பாகத்தில் தன்னுடைய அனுமதி இன்றி தான் சொல்லிக் கொடுத்த வர்மக்கலை முத்திரைகளை பயன்படுத்தி இருப்பதாக ஆசான் ராஜேந்திரன் பட வெளியீட்டுக்கு முன்பே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்து படத்தை வெளியிட தடை கூறினார். ஆனால் நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
அதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இந்த வர்மக்கலையை எப்படி பயன்படுத்தினீர்கள் என்பதற்கான சான்றுகளை அளிக்கும்படி கேட்டார். இந்த நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பிலிருந்து இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்னொரு வர்மக்கலை ஆசான் ஆன பிரகாசம் குருக்கள் என்பவரை, இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்தவர் இவர்தான் என்று கூறி அறிமுகப்படுத்தி அவர் பேசுவது போன்று ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் ராஜேந்திரனின் புகாருக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது.