'கோட்' மோதிரத்துடன் வைரலாகும் விஜய் புகைப்படம்! | ஒரு வாரத்தில் 400 கோடி கடந்த 'தேவரா' வசூல் | விஜய் 69வது படத்தின் டெக்னீசியன்கள் பட்டியல் வெளியானது! | மனதை கல்லாக்கி அந்தக் காட்சிகளை நீக்கினேன் - பிரேம்குமார் | கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய் | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா! | 2024க்கான உலகின் மிகச்சிறந்த 25 ஹாரர் படங்களில் 2ம் இடம் பிடித்த பிரம்மயுகம் | போக்சோவில் கைதான ஜானிக்கு தேசிய விருது வழங்கப்படுமா? | ஒரே நாளில் விஜய்யின் இரண்டு 'பூஜைகள்' | வேட்டையன் படத்தின் இடைவேளையில் விடாமுயற்சி டீசரா? |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஜயண்டே இரெண்டாம் மோஷனம். ஜித்தின் லால் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் மூன்று விதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக உருவாகியுள்ளது. இதில் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 12ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் இந்த டிரைலரை கேஜிஎப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் சமீபத்தில் பார்த்து ரசித்ததுடன் இந்த படத்தின் கதை அம்சம், மேக்கிங், டொவினோ தாமஸின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து சிலாகித்து பாராட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ள டொவினோ தாமஸ் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு உங்களது பாராட்டு எங்களை இன்னும் பெரு மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.