புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
சமீபத்தில் மலையாள திரையுலகில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பல பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் மீது வழக்குகளும் பதியப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலும் சீனியர் நடிகர்களே குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில் எதிர்பாராத அதிர்ச்சியாக பெண் ஒருவர் நடிகர் நிவின்பாலி தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்த நிவின்பாலி இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையையும் இல்லை என்றும் இதை சட்டப்படி எதிர்கொண்டு உண்மையை நிரூபிப்பேன் என்றும் கூறினார். இந்த நிலையில் நிவின்பாலியை மலையாள திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன், நிவின்பாலி மீது கொடுக்கப்பட்ட இந்த புகாரில் உண்மையில்லை என்றும் நிவின்பாலி தன்னை துபாயில் பலாத்காரம் செய்ததாக புகாரில் அந்தப்பெண் குறிப்பிட்டிருந்த அதே தேதியில், தான் இயக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான வர்ஷங்களுக்கு சேஷம் என்கிற படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டு நடித்து வந்தார், அப்படி இருக்கையில் அவர் எப்படி துபாயில் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூற முடியும் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வர்ஷங்களுக்கு சேஷம் படத்தில் வினீத் சீனிவாசன் குறிப்பிட்ட அதே தேதியில் நிவின்பாலியுடன் இணைந்து நடித்த சின்னத்திரை தொகுப்பாளரும் நடிகையுமான பார்வதி கிருஷ்ணா என்பவர் நிவின்பாலிக்கு ஆதரவாக தானும் களமிறங்கியுள்ளார். இது குறித்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் சில வீடியோ கிளிப்புகள் ஆகியவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதுடன் அதே வீடியோவில் சம்பந்தப்பட்ட அந்த டிசம்பர் 14ம் தேதி நிவின்பாலியும் நானும் நடிக்கும் காட்சிகள் தான் முழுவதும் படமாக்கப்பட்டு வந்தன. இதுதான் உண்மை. என்னுடன் நடித்த சக நடிகருக்கு ஒரு அநீதி நடக்கிறது என தெரிய வந்ததும் இந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டும் என தோன்றியது. உண்மை என்பது எப்போதுமே எளிதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.