மலையாள நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை திடீர் பல்டி | நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா |
மலையாள திரையுலகில் இப்போதைய வெற்றி கூட்டணி என்றால் இயக்குனர் ஜீத்து ஜோசப்-மோகன்லால் இருவரும் தான். திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்கள், டுவல்த் மேன், கடந்த வருடம் வெளியான நேர் என தொடர்ந்து நான்கு வெற்றி படங்களை இவர்கள் கொடுத்துள்ளனர். அதே சமயம் கடந்த 2020ல் ராம் என்கிற படத்தை ஆரம்பித்தனர். திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா முதல் அலை தாக்கம் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு சில காரணங்களால் இப்போது வரை மீண்டும் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு ராம் படத்தை பற்றி இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியபோது, நிச்சயம் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அதேசமயம் நீண்ட நாட்களாக நிற்கும் ஒரு படத்தை துவங்குவதற்கு ஒரு தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கலும் இருக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது, வரும் ஆகஸ்ட் மாதம் ராம் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், “துனிசியா, லண்டன், மும்பை, சென்னை மற்றும் கேரளாவில் தொடர்ந்து 52 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாகத்தை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றும் கூறியுள்ளார். ராம் படத்தைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு அதன் தயாரிப்பாளரே இப்படி அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளதால் நிச்சயமாக இந்த வருடம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.