பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது.
இப்படத்தின் தயாரிப்பாளரான நமித் மல்கோத்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் இரண்டு பாகங்களின் பட்ஜெட் 4000 கோடி என தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலக வரலாற்றில் இத்தனை கோடி செலவு செய்து இதுவரையில் எந்த ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டதில்லை.
இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இந்த விஎப்எக்ஸ் காலத்தில் திரைப்படங்களாக உருவாக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கெனவே அவை முந்தைய காலகட்டங்களில் பலரால் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகத்தில் இதற்கு முன்பு அதிக பட்ஜெட் படங்களாக 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டு பாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் பாகம் வெளிவந்த நிலையில் அதன், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாக வேண்டி உள்ளது.
'ராமாயணா' படத்தின் பட்ஜெட் 4000 கோடி என்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.