அன்று சென்னை, நேற்று ஹைதராபாத் - தியேட்டர் மரணங்கள் | தமிழ்ப் படங்களுக்கு இணையாக வெளியான 'புஷ்பா 2' | 'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் முதல் முறையாக லூசிபர் என்கிற படம் மூலம் இயக்குனராகவும் மாறினார். மோகன்லாலை கதாநாயகனாக வைத்து இவர் இயக்கிய லூசிபர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என்றும் அதற்கு எம்புரான் என டைட்டில் வைக்கப்பட்டதாகவும் அப்போதே அறிவித்தார் பிரித்விராஜ். ஆனால் மோகன்லால், பிரித்விராஜ் இருவரும் தங்களது படங்களில் பிசியாக நடித்து வந்ததால் லூசிபர் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து அடுத்ததாக இதன் படப்பிடிப்பு குஜராத் மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய மோகன்லால் இந்த வருடம் டிசம்பர் மாதம் அல்லது 2025 ஜனவரியில் நிச்சயமாக லூசிபர் 2 வெளியாகும் என்று கூறியுள்ளார்.