‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
தமிழ்த் திரையுலகத்தைப் போலவே தெலுங்குத் திரையுலகமும் இந்த ஆண்டில் இதுவரையில் வசூல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்காவது ஒரே ஒரு 'அரண்மனை 4' படம் கிடைத்தது. ஆனால், தெலுங்கில் அப்படி ஒரு படம் கூட அமையவில்லை. இருந்தாலும் 'கல்கி 2898 எடி, புஷ்பா 2, தேவரா' என சில பெரிய படங்கள் அங்கு வர இருப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இருந்தாலும் இனிமேல் அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் ஆகியவற்றை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெலுங்கானா தியேட்டர்காரர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த திடீர் முடிவு தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. நடிகர்களுக்கும் ஒரு ஓபனிங் கிடைக்கக் காரணமாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர்காரர்களின் முடிவு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிகாலை காட்சிகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. காலை 9 மணிக்கு மேல்தான் இங்கு காட்சிகள் நடைபெறுகிறது.