'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் அண்ணனை போல தானும் ஒரு நடிகராக மாறி சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவுக்கும் அவரது தம்பிக்கும் கிட்டத்தட்ட குரல் ஒரே போல தான் இருக்கும். சமீபத்தில் ஆனந்த் தேவரகொண்டா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரிடமும் இந்த குரல் ஒற்றுமையால் என்ன சுவாரசியமான விஷயங்கள் நடந்தது என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, “சில நேரங்களில் எங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நாங்கள் இப்படி மாற்றி பேசி பிராங்க் செய்வது வழக்கம். பெரும்பாலான சமயங்களில் எங்கள் அம்மாவுக்கே யாருடைய குரல் இது என்று பிரித்துப் பார்க்க சிரமமாக இருக்கும். இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. என்னுடைய படம் ஒன்றில் எனக்காக ஆனந்த் தேவரகொண்டா சில காட்சிகளில் டப்பிங் பேசி இருக்கிறார். படத்தில் பார்க்கும்போது எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால் அது எந்த படம் என்று சொல்ல மாட்டேன். உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன்” என்று ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.