காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛தி ரோடு'. கடந்த 2000ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்ட கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. திரிஷாவுடன் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் சபீர், மியாஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். அக்டோபர் ஆறாம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
திரிஷா புலனாய்வு காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வெளியாகி இரண்டே நாட்களில் இந்த டிரைலர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இதுவரை திரிஷா கதையின் நாயகியாக நடித்து வெளியான படங்களின் டிரைலர்களில் இந்த டிரைலருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.