சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? | 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தரும் வின்சென்ட் செல்வா | 'எம்.குமரன்' ரீ-ரிலீஸ் : நதியா மகிழ்ச்சி | குட் பேட் அக்லி ஓடிடியில் வெளியாகும் தேதி, ரசிகர்கள் அதிர்ச்சி | பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவரகொன்டா மீது வழக்கு பதிவு | ஐபிஎல் சீசன் : இரண்டு மாதங்களுக்கு தியேட்டர்களுக்கு சிக்கல் | 'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? |
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரகு தாத்தா மற்றும் ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை தவிர ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 17 மில்லியனுக்கும் அதிகமானோர் அவரை பாலோ செய்யும் நிலையில், தொடர்ந்து வீடியோ புகைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் தந்தையர் தினத்தை ஒட்டி புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர், சாலையோரத்தில் உள்ள ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டுள்ளார். அது குறித்த ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் ஸ்டார் ஹோட்டலிலேயே சாப்பிடும் நிலையில், பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் இப்படி கையேந்தி பவனில் சாலையில் நின்றபடி சாப்பிடுவதை பார்த்து ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகளை கொடுத்து வருகிறார்கள்.