சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
மலையாளத்தில் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வழங்கி பின்னர் கதையின் நாயகனாகவும் மாறியவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தெலுங்கில் 'தசரா' படத்தில் வில்லனாக நடித்த இவர் தமிழில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய வில்லன் வேடத்தில் நடித்து, பின்னர் படம் குறித்தும் விஜய் குறித்தும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில் தற்போது 'சூத்திர வாக்கியம்' என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார் ஷைன் டாம் சாக்கோ. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் மலப்புரம் அருகே உள்ள எடப்பால்-பொன்னானி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷைன் டாம் சாக்கோ. காலை 10 மணி அளவில் அங்கே சாலையில் அவர் நிற்பது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த சமயம் அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் ஷைன் டாம் சாக்கோவை தூரத்தில் இருந்து பார்த்ததும் போலீசாரின் வாகன சோதனை தான் நடக்கிறதோ என்று எண்ணி சடன் பிரேக் போட்டு உள்ளார்.
மழையால் ஈரமாகியிருந்த சாலை என்பதால் சடன் பிரேக்கால் தடுமாறிய வாகனம், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக ஓடி வந்த ஷைன் டாம் சாக்கோ, அந்த வாலிபரை தூக்கிவிட்டு உதவியதுடன் அவரை அதே இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையிலும் தானே கொண்டு போய் சேர்த்தார். மறக்காமல் அந்த இளைஞருடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.