ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராகவும் சமீப நாட்களில் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். இவர் கதையின் நாயகனாக நடித்த ஜோசப் மற்றும் தானே இயக்கி நடித்த பணி என இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இன்னொரு பக்கம் தமிழில் கடந்த சில மாதங்களில் வெளியான ரெட்ரோ மற்றும் தக் லைப் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல மலையாள கமர்சியல் இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் உருவாகி வரும் 'வரவு' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மூணாறு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டு லொகேஷனில் இருந்து தங்குமிடத்திற்கு திரும்பிய போது அவரும் படக்குழுவினர் மூன்று பேரும் பயணித்த ஜீப் ஒன்று திடீரென எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது. சிறிய காயங்களுடன் ஜோஜூ ஜார்ஜ் மற்றும் உடன் வந்தவர்கள் உயிர் தப்பினாலும் மூணாறில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டனர். படப்பிடிப்பும் திங்கள் முதல் வழக்கம்போல தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.