பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் அதன்பிறகு தனது தந்தையின் வழியை பின்பற்றி சில வருடங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். கடந்த வாரம் அவரது நடிப்பில் டயஸ் இரே என்கிற ஹாரர் திரைப்படம் வெளியாகி இருந்தது. பிரம்மயுகம் படத்தை இயக்கிய ராகுல் சதாசிவன் இயக்கியிருந்தார்.
ரசிகர்களிடம் இந்த படம் வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியான ஒரே வாரத்தில் உலக அளவில் 56 கோடி வசூலித்து தற்போது 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.. இதற்கு முன்னதாக கடந்த வருடம் பிரணவ் நடிப்பில் வெளியான வருஷங்களுக்கு சேஷம், அதற்கு முன்பு வெளியான ஹிருதயம் ஆகிய படங்களும் 50 கோடி வசூல் பட்டியலில் இடம் பிடித்தவை தான். அந்த வகையில் 50 கோடி வசூலில் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் பிரணவ் மோகன்லால்.