3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

மோகன்லால் நடிப்பில் நேரடி தெலுங்கு படமாக, அதேசமயம் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள படம் விருஷபா. நந்தா கிஷோர் இயக்கியுள்ள இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இதில் கதாநாயகிகளாக ராகினி திவேதி, நேஹா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகை ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகனான ரோஷன் மேகா ஸ்ரீகாந்த் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். நவம்பர் 6ம் தேதியே வெளியாகும் என ஏற்கனவே இந்த படம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில காரணங்களால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் மோகன்லால் பகிர்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார்.