உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா |

சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடித்த டைஸ் இரே திரைப்படம் வெளியானது. ஹாரர் திரில்லர் ஆக வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த வருடம் மம்முட்டியை வைத்து பிரம்மயுகம் என்கிற வெற்றி படத்தை கொடுத்த ராகுல் சதாசிவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் இதன் வெற்றியைத் தொடர்ந்து இந்த வாரம் முதல் தெலுங்கிலும் இந்த படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இந்த படம் மலையாள மொழியிலேயே வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.