ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

நடிகை காஜல் அகர்வால் கார் விபத்தில் சிக்கியுள்ளதாகவும், இறந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவின. இந்த செய்திகளில் உண்மை இல்லை என நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்து உறுதி செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ''நான் விபத்தில் சிக்கி விட்டதாகவும், உயிருடன் இல்லை என்றும் சில அடிப்படை ஆதரமற்ற செய்திகள் பரவி வருகிறது. இதனை அறிந்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். நான் கடவுளின் அருளால் நலமாக உள்ளேன். உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இ
துபோன்ற வதந்திகளை யாரும் நம்பவோ, பரப்பவோ வேண்டாமென்று தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். உண்மையையும், நேர்மறை விஷயங்களையும் நாம் பரப்புவோம்'' எனப் தெரிவித்துள்ளார்.
காஜல் தொடர்பாக அவ்வப்போது வதந்தி பரவிவரும் நிலையில், அவர் உயிருடன் இல்லை என்றுகூட வதந்தியை பரப்பிகின்றனர் சிலர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள காஜலின் அறிக்கையால், அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.




