ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா |

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படம் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சுதா கெங்கரா இயக்கும் தனது 25 வது படமான பராசக்தியில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் 2026ம் ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது.
இந்த படத்தை அடுத்து அவர் நடிக்கப் போகும் மூன்று படங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், முதல் படமாக ஏற்கனவே தன்னை வைத்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பவர், அந்த படத்தை முடித்ததும் புஷ்கர் காயத்ரி இயக்கும் படத்தில் நடிக்கிறாராம்.
அதேசமயம் குட் நைட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது .