சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' |
கடந்த 2016ம் ஆண்டில் அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தெறி'. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை அட்லீ மற்றும் ஹிந்தி தயாரிப்பாளர் முராத் கெதானி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். பாலிவுட் நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கீ பட இயக்குனர் காளிஸ் இயக்குகிறார்.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் வாமிகா கபி நாயகியாக நடித்து வருகிறார். மற்றொரு கதாநாயகியாக தமிழில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், வருண் தவானுடன் ஆட்டோவில் பயணித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த படம் அடுத்த வருடம் 2024 மே 31ம் தேதி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.