'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு சமமாக முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. தற்போதும் ஹீரோவாக நடித்தாலும் தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது மூத்த மகன் கோகுல் சுரேஷ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, முதுகாவ் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறாத அவர் மம்முட்டியுடன் மாஸ்டர்பீஸ், தனது தந்தையுடன் இணைந்து பாப்பன் உள்ளிட்ட சில படங்களில் இரண்டாம் நிலை நடிகராக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் கோபியின் இளையமகன் மாதவ் சுரேஷ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரிகேட் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவரது தந்தை சுரேஷ்கோபியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை பிரவீன் நாராயணன் என்பவர் இயக்குகிறார்.. தான் கதாநாயகனாக அறிமுகமாவதை தொடர்ந்து நடிகர் மம்முட்டியின் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளார் மாதவ் சுரேஷ்.