ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் |

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களாக படப்பிடிப்பு தளத்தில் இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி, தற்போது போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பெங்களூருக்கு இது குறித்த சிகிச்சைக்காக குடும்பத்துடன் காரில் சென்றபோது கார் விபத்தில் சிக்கியதில் உடன் பயணித்த அவரது தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். இப்படி தொடர்ந்து துயரமான நிகழ்வுகளை சந்தித்து வரும் ஷைன் டாம் சாக்கோ தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியின் போது, “இதற்கு முன்னதாகவும் நான் போதை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டேன். அதன்பிறகு என் சம்பந்தமாக சின்ன சின்ன பிரச்சனைகள் வெளியே பேசப்பட்டன. அந்த சமயத்தில் நடிகர் மம்முட்டி என்னை அழைத்து நீ ஒன்றும் அவ்வளவு பிரச்சனை செய்யும் ஆளாக இல்லை.. ஆனாலும் நீ சில விஷயங்களை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். எல்லாம் நன்றாக இருக்கும். ரொம்பவும் அதிகமாக சிந்தனை செய்யாதே.. வருத்தப்படாதே.. இதைத் தாண்டி முன்னோக்கி நீ நகர்ந்து செல். மற்ற எல்லாம் உன்னை தொடரும் என்று அறிவுரை கூறினார். எனக்கு இது போன்ற கடினமான தருணங்களில் பக்க பலமாக நின்று ஆலோசனை கூறியவர்களில் முதன்மையானவர் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.
அவர் குறிப்பிடுவது போலவே கடந்த இரண்டு மூன்று வருடங்களிலேயே மம்முட்டியுடன் இணைந்து பீஷ்ம பருவம், உண்ட, கிறிஸ்டோபர், கண்ணூர் ஸ்குவாட், மம்முட்டியின் நடிப்பில் கடைசியாக வெளியான பஷூக்கா என தொடர்ந்து மம்முட்டியின் படங்களில் ஷைன் டாம் சாக்கோ தவறாது இடம்பெற்று நடித்து வருகிறார். அந்த அக்கறையில் மம்முட்டி இவருக்கு இப்படி ஒரு அறிவுரை கூறியுள்ளதாக தெரிகிறது.




