அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

கடந்த இரண்டு தினங்களாக மகேஷ்பாபு புதிதாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள கைத்தறி நெசவு மேற்கொள்ளும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் அவர்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் விதமாகவும் மகேஷ்பாபு தன் மனைவியுடன் சேர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி உள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள நாராயணன்பேட் கிராமத்தைச் சேர்ந்த பெண் நெசவாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்பதற்காக ஆருண்யா என்கிற ஆன்லைன் விற்பனை தளத்தை துவங்கியுள்ளனர். மகேஷ்பாபு இது பற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, கிராமத்து பெண்களின் திறமையை, குறிப்பாக நெசவாளர்கள் மற்றும் கலைஞர்களின் திறமையையும் உழைப்பையும் வெளிக்கொண்டு வந்து சுயதொழில் மூலமாக அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் இந்த தளத்திற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல தனது மனைவி நம்ரதா சிரோத்கருடன் சம்பந்தப்பட்ட நெசவாளர் பெண்களையும் இந்த விற்பனை தளத்தின் பொறுப்பாளர்களையும் நேரிலேயே சந்தித்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.




