அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'கேஜிஎப் 2' படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தார்கள். கேஜிஎப் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் கேஜிஎப் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது, "கேஜிஎப் 2 குழுவினருக்கு வாழ்த்துக்கள். யஷ் வெறித்தனமான நடிப்பு மற்றும் உழைப்பு மூலம் ரசிகர்களை காந்தம் போல ஈர்க்கிறார். சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஜி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். ரவி பாஸ்ரூரின் சிறந்த இசை மற்றும் புவன் கவிதாவின் அற்புதமான காட்சியமைப்பு. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மரியாதை. பிரசாந்த் நீல் அவர்களுக்கு எனது மரியாதை. ஒரு சிறப்பான சினிமா அனுபவத்திற்காகவும், இந்திய சினிமாக் கொடியை உயரப் பறக்க வைத்ததற்கும் அனைவருக்கும் நன்றி. கேஜிஎப் 2" என்று தெரிவித்துள்ளார்.