டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
தமிழ் தயாரிப்பாளரான ஏ.எம். ரத்தினத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கும் படம் 'ஹரிஹர வீரமல்லு'. பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் வில்லனாகவும், முகலாய சக்கரவர்த்தி அவுரங்கசீப்பாகவும் பாபி தியோல் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'சாவா' என்ற இந்தி படத்தில் அவுரங்கசீப் ஒரு சர்வாதிகார மன்னராக சித்தரிக்கப்பட்டார். இதனால் அவுரங்கசீப் மீது கோபமடைந்த மக்கள் அவரது சிலைகளை உடைத்தனர். சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டது.
இந்த நிலையில் 'ஹரிஹர வீர மல்லு' படத்தில் இடம்பெறும் அவுரங்கசீப் கேரக்டரை சற்று மாற்றி அமைத்து அதற்கேற்ப சில காட்சிகளை மீண்டும் படமாக்கி உள்ளார் ஜோதி கிருஷ்ணா. ஆனால் 'அனிமல்' படத்தில் பாபி தியோலின் நடிப்பை பார்த்து அதற்கு ஏற்பவே காட்சிகள் மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஜோதி கிருஷ்ணா கூறியிருப்பதாவது: படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி தியோல் நடித்த சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்பு, பாபி தியோல் நடித்த 'அனிமல்' திரைப்படத்திலுள்ள அவரின் பிரமிக்கவைக்கும் நடிப்பை பார்த்த பிறகு, அவரது கதாபாத்திரத்தை முழுமையாக மறுபதிவை செய்து, புதியதொரு வடிவமைப்பில் உருவாக்க முடிவு செய்தோம்.
'அனிமல்' படத்தில் அளித்த அந்த மவுன நடிப்பு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. சொற்கள் இல்லாமல், முகபாவனைகளின் வழியாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திறமை எனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், ஹரிஹர வீரமல்லு படத்திலும் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை முழுமையாக மாற்ற வேண்டும் என முடிவு செய்தேன்.
இந்த புதிய வடிவமைப்பின் மூலம் அவுரங்கசீப்பின் கதாபாத்திரத்தில் ஆழமும், ஆளுமை கொண்ட அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. கதையின் பின்னணி, உந்துதல், உடல் மொழி என அனைத்தும் பாபி தியோலின் நடிப்பு சக்திக்கு ஏற்ப மறு வடிவம் பெறப்பட்டுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம், பாபி தியோலின் தற்போதைய பான் இந்தியா புகழுக்கும், அவரிடம் இருக்கும் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கும் நிச்சயமாக நீதியளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறினார்.