வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி | ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி | சென்ட் பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தனா | கூலி: அமெரிக்கா டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் | குடும்பப் படங்களுக்கான வரவேற்பு: மீண்டும் நிரூபிக்குமா இந்த வாரப் படங்கள் | சூர்யாவுக்கு 50, தனுஷிற்கு 42 : சுடச்சுட வெளியாகும் புது அறிவிப்புகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பின்னணி இசை தாமதம்? | மாரீசன் படத்தை பேசாத வடிவேலு, பஹத் | “ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப் |
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் தெலுங்கில் முன்னணி நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள பிரமாண்ட படம் 'ஹரி ஹர வீரமல்லு'. பாபி தியோல், தி அகர்வால், நாசர், ரகு பாபு, சுனில், நோரா பதேகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கீரவாணி இசையமைக்கிறார் . இது பவன் கல்யாண் நடிக்கும் முதல் பீரியட் படமாகும். 17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் நடக்கும் ஆக்ஷன்- அட்வென்ச்சர் படமாக தயாராகி உள்ளது.
இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஜூன் 12ம் தேதியன்று வெளியாகிறது. இன்னும் ரிலீஸிற்கு ஒருவாரமே உள்ள நிலையில் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் ஜூன் 20ம் தேதியன்று வெளியாகும் தனுஷின் 'குபேரா' படத்திற்கு இன்னும் கூடுதல் திரைகள் என்கிறார்கள்.