ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் | என் படங்களில் அஞ்சலியை தொடர்வது ஏன்? : இயக்குனர் ராம் | கில்லர் எனது கனவுப்படம் : மெக்சிகோவில் படப்பிடிப்பு நடத்தும் எஸ்.ஜே.சூர்யா | பிளாஷ்பேக் : ஆண்பாவத்தில் 5 நாள் மட்டும் நடித்த ரேவதி | தமிழில் ரவுண்டு வருவாரா கிர்த்தி ஷெட்டி | ஜிஎஸ்டி சோதனை பற்றி விஷ்ணு மஞ்சு விளக்கம் | பிளாஷ்பேக் : என்.எஸ்.கே, மதுரம் ஜோடிக்கு போட்டியாக வந்த காமெடி ஜோடி | கிரேஸ் ஆண்டனிக்காக 5 மாதங்கள் காத்திருந்த ராம் |
விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பின்னர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் நுழைந்த இவர் பிக் பாஸ் பிரபலத்திற்கு பின்னர் முருங்கைக்காய் சிப்ஸ், டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கதாநாயகனாக நடிக்க பன் பட்டர் ஜாம் என்கிற படம் தயாராகி வருகிறது. வரும் ஜூலை 17ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது..
இதை பார்த்துவிட்டு நடிகர் விஜய் ராஜூ ஜெயமோகனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் இந்த வீடியோ தன்னை சிரிக்க வைத்ததாகவும் ராஜு ஜெயமோகன் கூறியுள்ளார். இந்த தகவலை பெருமையாக பகிர்ந்து கொண்டுள்ள ராஜு ஜெயமோகன், “விஜய் போனில் அழைத்து, வேற லெவல் பா... உண்மையிலேயே தியேட்டர்ல பாக்கணும்னு தோணுது” என்று கூறினார். இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். தளபதியை நான் இன்று சிரிக்க வைத்து விட்டேன். அப்படி என்றால் இந்த உலகம் எனக்குத்தான்” என்று கூறியுள்ளார்.