பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் விக்ரம் பிரபு கும்கி படம் போல அவரது திரையுலக பயணத்தில் அடுத்து மிகப்பெரிய வெற்றியை ருசிக்காவிட்டாலும் டாணாக்காரன், இறுகப்பற்று போன்ற டீசன்டான வெற்றிகளை அவ்வப்போது பெற்று வருகிறார். தொடர்ந்து அவரது படங்களும் சீரான இடைவெளியில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் அவரது நடிப்பில் உருவாகியுள்ள லவ் மேரேஜ் இன்று திரைப்படம் வெளியாகி உள்ளது. இன்னொரு பக்கம் முதன்முறையாக தெலுங்கில் அவர் காட்டி என்கிற படத்தில் நடித்துள்ளார். அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று விக்ரம் பிரபு கூறும்போது, “இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை இயக்குனர் கிரிஷ் சந்தித்தபோது நான் அவரிடம் உண்மையாகவே தெலுங்கில் வேறு நடிகர்களே இல்லையா என்னை தேடி வந்து அழைப்பதற்கு என்ன காரணம். இந்த சந்தேகத்தை மட்டும் நீங்கள் நிவர்த்தி செய்துவிட்டால் நிச்சயம் நான் நடிக்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இயக்குனர் கிரிஷ், சார் நான் உங்கள் ரசிகன் நீங்கள் நடித்த படங்கள் எல்லாவற்றையும் பார்த்து விடுவேன் என்று கூறி என்னுடைய படங்களில் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்துப் பேச ஆரம்பித்தார். அதன்பிறகு தான் அவர் இந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியானவனாக இருப்பேன் என்று தான் என்னை தேடி வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்” என்று கூறியுள்ளார்.