100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

‛எட்டு தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் நடித்துள்ள படம் ‛3bhk'. இதன் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடிகர் ரவி மோகன் பேசியதாவது...
இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். பொதுவாக ஒரு ஹீரோ படத்தை மற்ற ஹீரோவுக்கு காண்பிக்க மாட்டார்கள். நானும் சித்தார்த்தும் நண்பர்கள். அவர் தெலுங்கில் நடித்த பொம்மரிலுவின் தமிழ் ரீமேக்கில் நான் நடித்தேன். இன்னமும் நாங்கள் நண்பர்கள். அவர் தவறான படங்களில் நடித்தது இல்லை. நான் கோமாளி படத்தில் ஸ்கூல் ரோலில் நடித்துவிட்டேன். இதில் சித்தார்த் பள்ளி மாணவராக நடித்துள்ளார். அப்படி நடிப்பது கஷ்டம்.
நான் குட் நைட் படம் பார்த்தேன். அதில் மீதா சிறப்பாக நடித்தார். இந்த படத்தில் அவர் இருக்கிறார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் சிறப்பான இசை கொடுத்து இருக்கிறார். சரத்குமார், தேவயானியும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். நானும் தேவயானி மேடமும் ஜீனி படத்தில் நடித்து இருக்கிறோம். இந்த படம் சொந்த வீடு கனவு பற்றி பேசுகிறது. நான் வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே சொந்த வீடுதான். ஆனால் இப்போது வாடகை வீட்டில் வசிக்கிறேன்'' என உருக்கமாக பேசினார்.




