மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

சென்னை நடன இயக்குனர் புலியூர் சரோஜா கணவரும், நடிகருமான சீனிவாசன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.
சென்னை, அசோக் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சீனிவாசன், 95. இவர், பிரபல நடன இயக்குனர் புலியூர் சரோஜாவின் கணவர். பாரதிராஜாவின் 'புதியவார்ப்புகள், கிழேக்கே போகும் ரயில்' உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். சினிமாவில் வசனகர்த்தா, இயக்குனர் என பல வகையில் பணியாற்றியுள்ளார். அரசின் 'கலைமாமணி' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர், வயது மூப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார். இறுதிச்சடங்கு நாளை வடபழனியில் நடக்க உள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த சீனிவாசனுக்கு சத்திய நாராயணன் என்ற மகன் இருந்தார். அவர், 30 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.