ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா | விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் | 2024ம் ஆண்டின் கடைசி படப்பிடிப்பு- பூஜாஹெக்டே வெளியிட்ட பதிவு | மண்ணே இல்லாத சாகுபடி முறை - முதலீடு செய்த சமந்தா | ரஜினியின் ஜெயிலர் 2 புதிய அப்டேட் வெளியானது | முதல் நாளில் உலக அளவில் 9 கோடி வசூலித்த விடுதலை 2 | வனிதா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு |
சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன். சினிமா மீதுள்ள ஆசையால் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பின்னர் 'லத்திகா' என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். இந்த படத்தை பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணியும், 100 ரூபாயும் கொடுத்து ஒரு தியேட்டரில் 100 நாள் ஓட வைத்தார். பின்னர் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அவர் அவ்வப்போது மோசடி வழக்குகளில் சிறை சென்று வந்தார். தற்போது 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில் சீனிவாசன் நேற்று சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.