மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
இப்போதெல்லாம் பக்கா கமர்ஷியல் படத்தில் பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடிப்பது டிரண்டாகி உள்ளது. சஞ்சய் தத், பாபி தியோல் போன்றவர்கள் இப்போதும் நடித்து வருகிறார்கள். ஆனால் 1980களிலேயே இந்த டிரண்ட் தொடங்கி விட்டது. ஜெய்சங்கர், ராதிகா நடித்த பக்கா கமர்ஷியல் படம் 'கன்னித்தீவு'. சயின்ஸ் பிக்ஷனையும், விட்டலாச்சார்யா கதையையும் கலந்து சிறிதும் லாஜிக் இல்லாத ஒரு மேஜிக்கான படத்தை இயக்கினர் டி.ஆர்.ராமண்ணா.
ஜெய்சங்கர், ராதிகாவுடன் சீமா, சி.எல்.ஆனந்தன், ஐசரி வேலன், என்னத்த கண்ணையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனியான ஒரு மர்ம தீவில் அந்த தீவுக்கு வருகிற புதியவர்களுக்கு ஏற்படுகிற திகிலூட்டும் அனுபவம்தான் படம். இந்த படத்தில் காளி என்கிற கொடூர வில்லனாக நடித்தார் அப்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருந்த ரஞ்சித். எம்.பி.ஷெட்டி என்ற கன்னட நடிகரும் நடித்திருந்தார்.
புதுமையான தந்திர காட்சிகள், திகிலூட்டும் காட்சிகள், சீமாவின் கவர்ச்சியான நடிப்பு, பயங்கர சண்டை காட்சிகள் இவற்றால் படம் நல்ல வசூலை கொடுத்தபோதும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதிலும் குறிப்பாக 'பாலிவுட் நடிகர் ரஞ்சித்துக்கு இதெல்லாம் தேவையா' என்கிற அளவிற்கு விமர்சனங்கள் வந்தது. இதனால் இந்த ஒரு படத்துடன் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார் ரஞ்சித்.