இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இருவரின் படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வித்தியாசமான நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் டேனியல் பாலாஜி. ஆனால் துரதிஷ்டவசமாக மிக குறைந்த வயதிலேயே கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் மாரடைப்பால் காலமானது திரையுலகைக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சி.
அந்த வகையில் இவர் இறப்பதற்கு முன்பு நடித்து வந்த படம் 'பிபி 180'. மிஸ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய இயக்குனர் ஜே பி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். ஒரு மருத்துவமனையில் பணியாற்றும், எதையும் நேர்மையாக செய்யத் துடிக்கும் தன்யா ரவிச்சந்திரனுக்கும் அர்னால்டு என்கிற ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆன டேனியல் பாலாஜிக்கும் இடையே நடக்கும் சவாலான யுத்தம் தான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தில் டேனியல் பாலாஜியின் நடிப்பு குறித்து இயக்குனர் ஜேபி கூறும்போது, “நான் நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து தான் சினிமாவிற்குள் வந்தேன். அதனால் இந்த படத்தில் டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்தில் பெருமளவு ரஜினியின் ஸ்டைலை தான் நான் புகுத்தி வடிவமைத்துள்ளேன். அவரும் அதை மிக சிறப்பாக செய்துள்ளார். எப்போதும் அவரை அண்ணா என்று தான் அழைப்பேன். என் தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது மறைவு தான் என்னை ரொம்பவே பாதித்தது” என்று கூறியுள்ளார்.