பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

சமீபத்தில் மறைந்த டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் 'பிபி 180'. இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். அதுல் இந்தியா மூவீஸ் சார்பில் போஸ்மியா தயாரித்துள்ளார். ஜேபி இயக்கியுள்ளார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். கே.பாக்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், நைனி சாவி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
தயாரிப்பாளர் போஸ்மியா கூறியிருப்பதாவது : உங்களது இந்த திடீர் மறைவு சினிமா உலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் திறமை, ஆர்வம் மற்றும் உங்கள் கதாபாத்திரத்திற்காக நீங்கள் கொடுத்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் உட்பட பலரது மனதிலும் அழியாத இடத்தை விட்டு சென்றிருக்கிறது. நீங்கள் இனி உடலால் எங்களுடன் இல்லாவிட்டாலும், உங்கள் கலைத்திறனால் நீங்கள் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் என்றும் வாழ்வீர்கள். நம் காலத்தின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இனிவரும் தலைமுறைக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருப்பீர்கள். அன்புள்ள டேனியல், நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் மீதான அன்பும் உங்கள் நினைவும் எங்கள் இதயங்களில் ஒருபோதும் குறையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.