2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' |

சின்னத்திரையில் நட்சத்திர தொகுப்பாளராக பணியாற்றிவர் ஆடம்ஸ். சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தும் உள்ளார். அவர் தற்போது 'கேன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், கருணாநிதி தயாரிக்கிறார். இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், க்ஷிஜிக்ஷி கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஸ்வமித்ரா இசை அமைக்கிறார், பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி ஆடம்ஸ் கூறும்போது “இன்றைய தலைமுறை இளம் பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க, ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.




