மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிக் கொண்டிருந்த காலத்தில் கலரில் படம் எடுத்தால் அது பெரிய பட்ஜெட் படம், கருப்பு வெள்ளையில் படம் எடுத்தால் அது சிறு பட்ஜெட் படம் என்பதாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கலரில் தயாராகும்போது ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் படங்கள் கருப்பு வெள்ளையில் வெளியாகும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் மிகவும் சிக்கனமாக படம் எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்த முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான 'அந்தரங்கம்' படத்தில் சில பாடல்கள் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் பாடி ஆடிய “ஞாயிறு ஒளிமழையில்...” பாடல் வண்ணத்தில் படமாகி பெரும் வரவேற்பை பெற்றது. வண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக பாடல் காட்சி மைசூர் பிருந்தாவன் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சாவித்ரி, தீபா உன்னி, மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார், சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.