10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் மிகவும் மனம் கவர்ந்த ஜோடியாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் என்கிற படத்தில் இவர்கள் இணைந்து நடித்தாலும் அதன் பிறகு இவர்களை சுற்றி சுழன்றடித்து வரும் கிசுகிசுக்களால் மீண்டும் இருவரும் இணைந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். ஆனாலும் இருவர் சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களிலும் சினிமா நிகழ்வுகளிலும் பரஸ்பரம் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் ஏப்ரல் 5ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள பேமிலி ஸ்டார் படம் வெளியாகிறது. தில் ராஜு தயாரித்துள்ள இந்த படத்தை விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா என்கிற ராசியான ஜோடியை உருவாக்கிய இயக்குனர் பரசுராம் தான் இயக்கியுள்ளார். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இந்த படம் வெளியாகும் ஏப்ரல் 5ம் தேதி தான் ராஷ்மிகாவின் பிறந்த நாளும் கூட.
அந்த வகையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏதேச்சையாக அமைந்ததா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என்கிற கேள்வி சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “விடுமுறை நாட்கள் துவங்குவதை முன்னிட்டு தான் இந்த தேதியை முடிவு செய்தோம். இது ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் எங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.