ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தனது திருமணத்தை சமீபத்தில் அறிவித்த தன்யா ரவிச்சந்திரன், சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் 'றெக்கை முளைத்தேன்'. கடந்த ஆண்டு வெளியான 'ரசவாதி' படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவர இருக்கும் படம். பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன், கஜராஜ், மீராகிருஷ்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ஆர். பிரபாகரன் தயாரித்து இயக்கி உள்ளார். இவர் சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வெச்ச சிங்கம்டா படங்களை இயக்கியவர். தரண் குமார் பின்னணி இசை அமைக்கிறார், தீசன் பாடல்களுக்கு இசை அமைக்கிறார், கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் பிரபாகரன் கூறும்போது "இத்தகைய படங்களைத் தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது லட்சியத்தின் வெளிப்பாடு தான் 'றெக்கை முளைத்தேன்'. கல்லூரியில் சேர்ந்த உடன் புதிய சிறகுகள் கிடைத்ததாக உணரும் மாணவர்கள் ஒரு புறம், அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவல் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத வகையில் இருக்கும்," என்றார்.