தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! | விஜய் அரசியல் வருகை குறித்து நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி பதில்! | விக்ரம் 63 படத்தின் புதிய அப்டேட்! | கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா: திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | திருமண நிச்சயதார்த்தம் நடந்தது: வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அபிநயா! |
அந்த காலத்தில் ஆண்களே பெரும்பாலும் கதை நாயகர்களாக நடித்தார்கள். பெண்கள் கதையின் நாயகியாக அதாவது சோலோ ஹீரோயினாக நடிப்பது அபூர்வம். அப்படி நடித்தாலும் அது புராண கதாபாத்திரமாக இருக்கும். இப்படியான ஒரு காலகட்டத்தில் வி.என்.ஜானகி 'தியாகி' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்தார். அதுவும் தாழ்த்தப்பட்ட பெண்ணாக. ராம்ஜிபாய் ஆர்யா இயக்கினார்.
ஜானகியுடன் என். கிருஷ்ணமூர்த்தி, வி.எஸ். மணி, 'ஸ்டண்ட்' சோமு, கே.தேவநாராயணன், கே.எஸ்.அங்கமுத்து, தோடி கண்ணன், கோலத்து மணி, டி.வி. சேதுராமன், சி.கே.நாகரத்னம், வி.சரோஜா ஆகியோர் நடித்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார்.
உயர்ஜாதி வகுப்பினர் பெரும்பான்மையாக வாழும் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து வரவோ, கோவிலுக்குள் நுழையவோ, பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கவோ அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த ஊரை சேர்ந்த உயர்ஜாதி வகுப்பை சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் படித்து விட்டு ஊர் திரும்புகிறான். அவனுக்கு தாழ்த்தப்பட்ட ஜாதி பெண்ணான ஜானகி மீது காதல் வருகிறது.
ஆனால் ஜானகி எங்கள் மக்களும் கோவிலுக்குள் செல்ல எப்போது அனுமதி கிடைக்கிறதோ அப்போது நாம் காதலிக்கலாம் என்று கூறி இருவரும் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதுதான் படத்தின் கதை. ஆனால் படம் அப்போது சுமாரான வரவேற்பையே பெற்றது.