சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது |

1983ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் இயக்கிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. முதல் படம் 'தங்கமகன்'. ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ், ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா நடித்திருந்தனர். பெரும் வெற்றி பெற்ற இந்த படம் மதுரையில் மட்டும் வெள்ளிவிழா கொண்டாடியது.
இன்னொரு படம் சிவாஜி நடித்த 'வெள்ளை ரோஜா'. இதில் சிவாஜி கிறிஸ்தவ பாதிரியார், போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். பிரபு, ராதா, அம்பிகா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படமும் 100 நாள் ஓடியது.
இதே தீபாவளியன்று கமல்ஹாசன் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' வெளிவந்தது. ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ராதா, சுலக்ஷனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல் இரண்டு வேடத்தில் நடித்திருந்த இந்த படமும் வெற்றி பெற்றது.
இது தவிர டி.ராஜேந்தர் இயக்கிய 'தங்கைக்கோர் கீதம்' படம் வெளியானது. இதில் சிவகுமார், டி.ரஜேந்தர், ஆனந்த பாபு, நளினி நடித்திருந்தார்கள். இதுவும் 100 நாள் படமாக அமைந்தது.
இதுதவிர சுஹாசினி, ராதா, ஊர்வசி நடித்த 'அபூர்வ சகோதரிகள்' என்ற படமும் வெளியானது. ஆர்.தியாகராஜன் இயக்கிய இந்த படமும் வரவேற்பை பெற்றது.