'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
சென்னையில் இன்று (ஆக.,26) நடிகர் ரவிமோகன் ‛ரவிமோகன் ஸ்டூடியோஸ்' என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கியுள்ளார். அந்த விழாவில் ரவி மோகன் பேசுகையில், ‛‛எனது நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‛ப்ரோ கோடு'. அந்த படத்தில் நானே ஹீரோவாக நடிக்கிறேன். கார்த்தியோகி இந்த படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் இந்த படம் உருவாகிறது. இதே நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ‛அன் ஆர்டினரி மேன்' படத்தை நானே இயக்கி இயக்குனர் ஆகிறேன். அதில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கிறார். ரவிமோகன் ஸ்டூடியோஸ் பட தயாரிப்பு, வெப் சீரிஸ், பட வினியோகத்தில் ஈடுபட உள்ளது'' என்றார்.
இந்த நிறுவன தொடக்க விழாவில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். பட தொடக்கவிழா, பூஜையில் ரவிமோகன் தோழி கெனிஷாவும் கலந்து கொண்டார். விழாவில் சந்தோஷ் சுப்ரமணியம் பட சீன் சிலவற்றை ரவிமோகன், ஜெனிலியா ரீ கிரியேட் செய்து ஆடியன்ஸை மகிழ்வித்தனர்.