இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

இதுவரை நல்லவராக நடித்த அனுஷ்கா 'காட்டி' படத்தில் கஞ்சா கடத்துபவராக நடிக்கிறாராம். அவருக்கு ரத்தம் சொட்டும் ஆக்ஷன் காட்சிகளும் உண்டாம். ஆந்திரா, ஒடிசா பகுதியில் ஒரு ஏரியாவில் நடந்த உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இந்த கதை உருவாகி இருக்கிறது. பல கிலோ எடையை ஈஸியாக துாக்கிக்கொண்டு, பல கிலோமீட்டர் பயணிக்கும் அவர்களை ‛காட்டீஸ்' என்பார்களாம். அப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்தவராக அனுஷ்கா நடித்து இருக்கிறார். அவர் கேரக்டர் பெயர் சீலாவதி.
கதை நடக்கும் ஒடிசா மலைப்பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தினார்களாம். ‛காட்டி' படத்தில் அனுஷ்கா ஜோடியாக நடிப்பவர் விக்ரம்பிரபு. சிம்பு, அனுஷ்கா நடித்த ‛வானம்' படத்தை இயக்கிய கிரிஷ், தமிழ், தெலுங்கில் இந்த படத்தை இயக்கி உள்ளார். காட்டி படத்துக்காக மற்ற படங்களில் நடிக்காமல் இருந்து இருக்கிறார் அனுஷ்கா. அவருக்கு பாகுபலி தவிர அடுத்து நடித்த படங்கள் ஹிட்டாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.